Skip to content
Home » தொடர்ந்து குறுக்கீடு.. வக்கீலை வெளியேற்ற உத்தரவிட்ட தலைமை நீதிபதி

தொடர்ந்து குறுக்கீடு.. வக்கீலை வெளியேற்ற உத்தரவிட்ட தலைமை நீதிபதி

  • by Authour

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு மனுதாரருக்காக வக்கீல் மேத்யூஸ் நெடும்பராவும் மற்றொரு மனுதாரருக்காக வக்கீல் நரேந்திர ஹூடாவும் ஆஜராகினர். முதலில் ஹூடாவை பேசுமாறு தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போது மேத்யூ இடைமறித்து பேசினார். அப்போது, ஹூடா முடித்த பிறகு   பேசுமாறு மேத்யூசை தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டார். ஆனால் மேத்யூஸ் இடைஇடையே பேசினார்.  இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டது..
மேத்யூஸ்: நான் தான் இங்கு மூத்த வக்கீல் ஆதலால் நான்தான் பேசுவேன்.
தலைமை நீதிபதி சந்திரசூட்: நான் உங்களை எச்சரிக்கிறேன். நீதிபதிகளிடம் இவ்வாறு பேசக்கூடாது,  இந்த நீதிமன்றத்துக்கு நான்தான் பொறுப்பு. காவலர்களே இவரை இங்கிருந்து அகற்றுங்கள் என உத்தரவிட்டார்.
மேத்யூஸ்: நானே இங்கிருந்து செல்கிறேன்.
தலைமை நீதிபதி சந்திரசூட்: நீங்கள் எதையும் சொல்ல வேண்டியதில்லை; நீங்கள் செல்லலாம். கடந்த 24 ஆண்டுகளாக நீதித் துறையை பார்த்து வருகிறேன். இந்த நீதிமன்றத்தில் வக்கீல்கள் உத்தரவிட அனுமதிக்க முடியாது.
மேத்யூஸ்: நானும், 1979ம் ஆண்டில் இருந்தே கோர்ட்டை பார்த்து வருகிறேன்.
தலைமை நீதிபதி சந்திரசூட்: மற்றொரு வக்கீல் பேசிக்கொண்டிருந்த போது நீங்கள் குறுக்கிட முடியாது. இனியும் அதுபோல் தொடர்ந்தால், கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும். இதையடுத்து, வக்கீல் மேத்யூஸ் நெடும்பரா நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறினார். சிறிது நேரத்துக்கு பின் அறைக்கு திரும்பிய மேத்யூஸ், தலைமை நீதிபதியை அவமதித்ததற்காக மன்னிப்பு கோரினார். வழக்கு விசாரணையின் போது, இது போல் குறுக்கிடுவது மேத்யூசுக்கு புதிதல்ல. கடந்த ஆண்டு மார்ச்சில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது குறுக்கிட்டு பேசிய அவரை, தலைமை நீதிபதி கண்டித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *