புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வேப்ப வயல் கிராமத்தில் நாட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு 4 இளைஞர்கள் வேட்டைக்கு செல்வதாக முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து நாட்டு துப்பாக்கியின் துளை சிறியதாக உள்ளது அதை பெரிது படுத்த வேண்டும் என்று இளைஞர்களே முடிவு செய்து ஆறுமுகம் என்பவரது வெல்டிங் பட்டரைக்கு துப்பாக்கியை எடுத்து சென்று வெல்டு வைத்துள்ளனர். வெல்டு வைக்கும் போது துளை பெரிதாகி பழனிச்சாமி- ஆராயி தம்பதியின் மகன் லட்சுமணன் (18) அந்த இளைஞன் வயிற்றில் குண்டு பாய்ந்து உள்ளது. இதனை அடுத்து அந்த இளைஞனை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க இயலாத காரணத்தினால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அந்த இளைஞனை அனுமதித்த போது அந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்ட தெரிவித்ததை அடுத்து அந்த இளைஞன் உடற்கு ஆய்வானது திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இறந்த லட்சுமணனுடன் சரவணன், தேக்கமலை மற்றும் ஒருவர் இருந்துள்ளனர். தகவல் அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி.மனோகரன், புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பான்டே , இலுப்பூர் ஆர்.டி.ஓ.தெய்வநாயகி ஆகியோர் சம்பவம் நடந்த கிராமத்திற்குசென்று விசாரணை நடத்தினர். துப்பாக்கி அனுமதி பெற்று வைத்துள்ளார்களா? எவ்வாறு துப்பாக்கி இவர்களது கையில் கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன்,தேக்கமலை இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் பலி.. புதுக்கோட்டையில் நடந்த பரிதாபம்..
- by Authour
