பாஜக, கடந்த 2014, 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை போல பெரும்பான்மை அல்லாமல் இந்த முறை கூட்டணி (NDA) அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த NDA கூட்டணியில் பிரதான கூட்டணி காட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்க்கு தேசம் (ஆந்திரா), நிதிஷ்குமரின் ஐக்கிய ஜனதா தளம் (பீகார்) கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதனால், இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024-இல் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு முக்கியவதத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களான பீகார் மற்றும் ஆந்திராவிற்கு கூடுதல் நிதிகள் ஒதுக்கப்பட்டன.
பீகார் மாநிலத்திற்கு சாலைகள், பாலங்கள் கட்ட சிறப்பு நிதி, பேரிடர் மேம்பாட்டு நிதி, புதிய மருத்துவ கல்லூரி, நாளந்தா பல்கலைக்கழகத்தை சுற்றுலா தலமாக மாற்றுவது, பீகார் கோயில்களுக்கு சிறப்பு நிதி, ஆந்திர மாநிலத்தில் தலைநகர் அமராவதியை மேம்படுத்த சிறப்பு நிதி என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.
இதுகுறித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அதேபோல, பாஜக அரசை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில்பட்ஜெட் மீதான தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், பீகார் , ஆந்திராவின் பட்ஜெட் வெளியாகிவிட்டது. மற்ற மாநிலங்கள் அல்வா சாப்பிடுங்கள் என அல்வா புகைப்படத்தை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளார்.