புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூ ரை சேர்ந்த இளைஞர் லட்சுமணன்(18). இன்று மதியம் இவர் வீட்டு முன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு லட்சுமணன் மீது பாய்ந்தது. இதில் அவர் துடி துடித்து கீழே சாய்ந்தார். உடனடியாக அவரை திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை சுட்டது யார், வேட்டையாட சுட்டபோது குண்டு பாய்ந்ததா, அல்லது லட்சுமணனை குறி வைத்தே சுட்டார்களா, அல்லது துப்பாக்கியை துடைத்தபோத குண்டு பாய்ந்ததா என விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் புதுக்கோட்டை, இலுப்பூர் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.