Skip to content
Home » சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையராக பிரகாஷ் நியமனம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையராக பிரகாஷ் நியமனம்

இந்து சமய அறநிலையத்துறை   இணை ஆணையர்கள்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   அதன் விவரம் வருமாறு: திருச்சி  சமயபுரம்  மாரியம்மன் கோவில்   செயல் அலுவலர் மற்றும் இணை ஆணையர் சி. கல்யாணி, திருச்சி இணை ஆணையராக மாற்றப்பட்டார்.

திருச்சி இணை ஆணையர்  ஆர். பிரகாஷ், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக மாற்றப்பட்டார்.

திருச்செந்தூர்  சுப்பிரமணியசுவாமி கோவில் இணை ஆணையர் மற்றும்  செயல் அலுவலர் திண்டுக்கல் இணை ஆணையராக மாற்றப்பட்டார்.

திண்டுக்கல் இணை ஆணையர் பா. பாரதி , சிவகங்கை மாவட்ட இணை ஆணையராக மாற்றப்பட்டார்.

காஞ்சிபுரம் இணை ஆணையர் வான்மதி,  சென்னையில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக(சரிபார்ப்பு) நியமிக்கப்பட்டார்.

மயிலாடுதுறை  இணை ஆணையர்  சு. மோகனசுந்தரம் . விழுப்புரம் இணை ஆணையராக மாற்றப்பட்டார்.  இதற்கான உத்தரவினை இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!