அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஜமீன் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் கடந்த 21 ஆம் தேதி சுத்தமல்லி கடைவீதி பகுதியில் வேகமாக சென்ற லாரியை அதே பகுதியை சேர்ந்த நக்கீரன் என்பவர் நிறுத்தி ஏன் இவ்வளவு வேகமாக கடைவீதி பகுதியில் செல்கிறீர்கள் என கேட்டு கொண்டிருந்ததாகவும், அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த சுதாகர் என்பவர் ஏன் லாரியை நிறுத்தி வைத்துள்ளீர்கள் என கேட்டு தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக 22 ஆம் தேதி காலை சிவன் கோயில் அருகே சுத்தமல்லி சேர்ந்த சுதாகர் மற்றும் அவரது அப்பா கோவிந்தசாமி மேலும் வானத்திரையன்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் என்ற முறையில் சக்திவேல் ஏன் இவ்வாறு தகாத வார்த்தைகளால் பொது இடத்தில் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் மற்றும் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன், மோகன்ராஜ் ஆகியோரை
தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் இருந்த கழியை எடுத்து தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் காயம்பட்ட தேவேந்திரன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் அளித்த புகார் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்களை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சுத்தமல்லி சேர்ந்த சுதாகர், வானதிரையன்பட்டினத்தைச் சேர்ந்த ரவி, புகழேந்தி, ஆகாஷ், இளையராஜா, பாரதிராஜா, ஈஸ்வரன், புருஷோத்தமன், ராஜேஷ், சூர்யா, வினோத், சுதாகர் மற்றும் சூரிய மணல் கிராமத்தைச் சேர்ந்த இளவழகன் ஆகிய 13 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.