கரூர் நகர பேருந்து நிலையம் வடபுறத்தில் அமைந்துள்ளது கரூர் ஆட்டோ ஸ்டாண்ட் சங்கத்தின் சார்பில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நீண்ட காலமாக ஆட்டோ ஓட்டுநர் ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சமூக விரோத செயல்களாக வழிப்பறி, விபச்சார ஆகியவை இரவு நேரங்களில் குறிப்பாக மணி பஸ் ஸ்டாண்ட் அருகிலும் புத்தகக்கடை சேலம் பஸ் நிற்கும் இடத்தின் பின்புறமும் இச்செயல் தொடர்ந்து அதிகம் நடைபெறுகிறது
மேலும் பயணிகளிடம் செல்போன் பணம் ஆகியவற்றை அடித்து பிடுங்குவதும், வலுக்கட்டாயமாக விபச்சாரத்திற்கு அழைப்பதும் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் இதனால் பொதுமக்களும் வெளியூர் பயணிகளும் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என ஆட்டோ ஓட்டுனர் சங்கம் கரூர் மாநகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் ஆட்டோ ஓட்டுநர்கள் கலைந்து சென்றனர்.