அரியலூர் மாவட்டம், சன்னாவூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கருவத்தோப்பு கிராமத்தை சேர்ந்த ஜெயபால், தனது 3 வளர்ப்பு நாய்களை வாக்கிங் அழைத்து சென்றுள்ளார். அப்போது நாய்கள் பந்து போல் இருந்த பொருளை கடித்த போது வெடி சத்தம் கேட்டு உள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயபால் அருகில் சென்று பார்த்த போது, இரண்டு நாய்களும் இறந்து கிடந்தது.
அப்போது சந்தேகப்படும் படி அருகில் இருந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில், நரியை பிடிக்க ஆட்டு
கொழுப்பை தடவி, நாட்டு வெடி வைத்ததையும், அதனை நாய்கள் கடித்ததால் வெடித்து இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து இருவரையும் வெங்கானூர் பொலீசாரிடம் ஒப்படைத்தனர். வெங்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிடிபட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, பெரம்பலூர் மாவட்டம் மலைப்பநகரை சேர்ந்த குறவர் இனத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் சுரேஷ் என தெரியவந்தது.
போலீசார் இரண்டு பேரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.