Skip to content
Home » செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு அவரது தரப்பில் மனு  தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது பதில் அளிக்க ஏப்ரல் 29ம் தேதி வரை அமலாக்கத்துறைக்கு காலஅவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் துவங்கி தொடர்ந்து அமலாக்கத்துறை பல்வேறு கட்டங்களில் கால அவகாசம் கேட்டு மே 6ம்தேதி வரை இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில், மே 8ம் தேதிவரை அமலாக்கத்துறை பதில் அளிக்ககாததால் உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை நடைபெறும் என ஜூலை 10ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 10ம் தேதி  செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, விசாரணையை வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்தார். இன்றும் நாளையும் மற்றொரு வழக்கில்  தான் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க கோரினார். இதற்கு செந்தில் பாலாஜி வழக்கறிஞர் அமலாக்கத்துறை வேண்டுமென்றே வழக்கை  இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டினார்.

செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ளார் . அவரது உடல் நிலையை  கருத்தில் கொண்டு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிமன்றம்   ஜூலை  12ம் தேதிக்கு விசாரணை நடைபெறும் என அறிவித்தது.

அதன்படி  ஜூலை  12ம் தேதி பிற்பகல் செந்தில் பாலாஜி வழக்கு  விசாரணைக்கு வந்தது. அப்போது  சொலிசிட்டர் ஜெனரலை் துஷார் மேத்தா ஆஜராகாததால் வழக்கு விசாரணை  ஜூலை 22ம் தேதிக்கு(திங்கட்கிழமை) தள்ளிவைக்கப்பட்டது. எனவே  அன்று பிற்பகல்  வழக்கு விசாரணைக்கு  வந்தது. அப்போதும் துஷார் மேத்தா ஆஜராகவில்லை.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.  உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில்  தொடர்ந்து செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.   எனவே அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். வழக்கில் என்ன விசாரிக்கிறார்கள். விசாரணை எப்போது முடியும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும்.

இவ்வாறு அவர் வாதிட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. 24ம் தேதி  நடந்த  வாதத்தில் நீதிபதி EDயிடம் சரமாரி கேள்வி  எழுப்பினர். பின்னர் வழக்கு ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி இன்று மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தது.  வழக்கு தொடங்கியது. வி்சாரணையை  அமலாக்கத்துறை இழுத்தடிக்கிறது என செந்தில் பாலாஜி தரப்பு குற்றம் சாட்டியது.

பின்னர் வாதாடிய அமலாக்கத்துறை தரப்பு,  செந்தில் பாலாஜி  தரப்பில்  இருந்து கைப்பற்றப்பட்ட   பென் டிரைவ் எங்கிருந்து கைப்பற்றப்பட்டது என  விசாரித்து வருகிறோம்.   XIS. WORD    பைல்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் குறித்து  விவரித்தார். இதைக்கேட்ட நீதிபதி வழக்கை நாளை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!