அரியலூரில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 1.83 ஏக்கர் பரப்பளவில் 19 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் 72 அரசு ஊழியர் வாடகை அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள்.சொ.க.கண்ணன் குத்து விளக்கேற்றி அடுக்குமாடி குடியிருப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
மேலும் இரண்டு அரசு ஊழியர்களுக்கு வாடகை வீடுகளுக்கான ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். இதனையடுத்து குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை, அதிலுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிள் ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.