Skip to content
Home » விடாமுயற்சி….மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி நிச்சயம்…கோவை கமிஷனர் …

விடாமுயற்சி….மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி நிச்சயம்…கோவை கமிஷனர் …

  • by Senthil

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் மற்றும் இயக்குனருமான டாக்டர் சி ஏ வாசுகி தலைமை தாங்கி பேசினார்..

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கே பாலகிருஷ்ணன்,மற்றும் மருத்துவராக தனது படிப்பை முடித்து சிவில் சர்வீஸ் தேர்வில்,வெற்றி பெற்ற டாக்டர் பிரசாந்த் ஆகியோர் கலந்து

கொண்டு மாணவர்களிடையே உரையாடினர்..
முன்னதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசுகையில்,இது தான் முடிவு என சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் என தெரிவித்தார்.எடுத்த முடிவில் விடாமுயற்சியுடன்

குறிக்கோளை அடைவதை இலட்சியமாக கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் விவசாயம்,சட்டம், காவல்துறை,அரசியல் என அனைத்து துறை சார்ந்த தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவித்த அவர்,தேர்வுகளுக்கு தயாராகும் போது சில இடர்பாடுகள் வரும் எனவும்,ஆனால் அதையும் தாண்டி இலட்சியத்தை அடைய மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றார்.கடந்த காலம்,மற்றும் எதிர் காலத்தை சிந்திக்காமல் நிகழ் காலத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறினார்.

தொடர்ந்து தமது அனுபவங்களை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்ட டாக்டர் பிரசாந்த்,பாடங்களை படிப்பது ஒரு புறம் இருந்தாலும் அதனை ஸ்மார்ட்டாக கையாளுவதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில் கல்லூரியின் முதல்வர் வி சங்கீதா ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் பி சுஜாதா டாக்டர் ஆர் சுமதி டாக்டர் ஆர் சரவணன் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!