அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு கிராமத்தைச் சேர்ந்தவர்
இராஜா, இவரது மனைவி சந்தியா (21) இவர்களுக்கு மோனிஷ் என்ற 2 வயது மகனும், கிருத்திகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர்.
இந்நிலையில் மனைவி கர்ப்பிணியாக இருந்த போது ராஜா வெளி நாட்டிற்க்கு ac மெக்கானிக் வேலைக்கு சிங்கப்பூர் சென்றுள்ளார். அதன் பிறகு தான் கிருத்திகா பிறந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை
சந்தியா வீட்டின் வெளியே, அவரது மகன் மோனிஷ் (2) உடன் குழந்தை கிருத்திகாவை விட்டுவிட்டு அருகில் உள்ள பால் பண்ணையில் பால் ஊற்ற சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது கிருத்திகா சுயநினைவு இல்லாமல் வாயில் மண்ணுடன் கிடந்துள்ளார். பின்னர் குழந்தையை கடலூர் மாவட்டம் பெண்ணாடம் இராஜா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தப்போது, மருத்துவர் பரிசோதனை செய்து குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சந்தியா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
சந்தியா தனக்கு பெண் குழந்தை பிறந்ததிலிருந்து இந்தக் குழந்தை என் மகனுக்கு பிறந்ததில்லை உனது கள்ளக்காதனுக்கு பிறந்தது என்று அடிக்கடி தன்னிடம் சண்டையிட்டதாகவும், தனது மாமியார் விருத்தம்பாள் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் குவாகம் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் தளவாய் போலீசார் விருத்தம்பாளை பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தினர். நீண்ட நேர விசாரணைக்குப் பின்னர் நான் தான் குழந்தையின் வாயில் மண்ணை அள்ளி போட்டேன் என்று ஒப்புக் கொண்டார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தில் சம்பவத்தன்று எனது மகனுக்கு பிறந்த பேரன் மீது பேத்தி மண்ணை அள்ளி போட்டு விளையாடினால். இதனால் ஆத்திரமடைந்த நான் பேத்தி வாயில் மண்ணை அள்ளி போட்டேன் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து தளவாய் போலீசார் விருத்தம்பாள் (60) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதல் சந்தேகத்தில் பாட்டியே பச்சிளங்குழைந்தையின் வாயில் மண்ணை போட்டு கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.