திருச்சி மாநகராட்சியால் சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்டும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 33 கே.வி. E.B. ரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11கி.வோ. வெல்லமண்டி உயரழுத்த மின்பாதையில் 22.07.2024 (திங்கட்கிழமை) காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்சார நிறுத்தம் செய்யப்பட இருப்பதால் அம்மின்பாதை வாயிலாக மின்விநியோகம் பெறும் தையல்காரத்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, காந்தி மார்கெட், கிருஷ்ணபுரம் ரோடு, மீன்மார்கெட், மணிமண்டப சாலை, பெரிய சௌராஷ்டிரா தெரு, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, மைலம் சந்தை, வெல்ல மண்டி, வளையல் காரத்தெரு, நரசிம்ம நாயுடு தெரு, கல் மந்தை, ராணித்தெரு, பெரிய கடைவீதி, முகம்மது அலி ஜின்னா தெரு, மன்னார் பிள்ளைத் தெரு, கோபால கிருஷ்ணன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் கா.முத்துராமன் தெரிவித்துள்ளார்.