தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது.. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், எம்.பி., முரசொலி, தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் இலக்கியா வரவேற்புரை ஆற்றினார். தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் மதியழகன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புத்தகத் திருவிழா இன்று முதல் வரும் 29ம் தேதி வரை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.