கர்நாடக மாநிலம மைசூரு மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு குடகு மாவட்டத்தில் பெய்யும் மழை வெள்ளம் பெருமளவில் வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கே. ஆர்.எஸ். அணைக்கு இன்று மதியம் நிலவரப்படி வினாடிக்கு 45,091 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
124.8 அடி உயரம் கொண்ட கே. ஆர்எஸ் அணையில் இன்று மதிய நிலவரப்படி நீர்மட்டம் 117.20 அடி. மழை நீடிப்பதால், அணைக்கு நீர்வரத்து இது அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே கே. ஆர்.எஸ். அணை நாளை நிரம்பிவிடும்.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கே. ஆர்.எஸ். அணையில் இருந்து நாளை 25 ஆயிரம் கனஅடி அல்லது அதற்கு மேல் வந்தாலும் அப்படியே மேட்டூர் அணைக்கு திறக்கப்படும். இன்றைய நிலவரப்படி மேட்டூருககு 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாளை 75 ஆயிரமாக உயரலாம். எனவே காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கர்நாடக அரசு அறிவித்துள்ளது.