பள்ளிக்கல்வித் துறை சார்பில், ரூ.264 கோடியே 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 12 ஆய்வகக் கட்டடங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள் மற்றும் திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தலைமை செயலகத்தில் இதற்கான விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பள்ளிக்கல்வித் துறை செயலாளர் எஸ். மதுமதி , ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குநர் ,. மா. ஆர்த்தி , பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ. நரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.