கேரளா, கர்நாடகத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், கர்நாடகத்தில் உள்ள கபினி அணை ஏற்கனவே நிரம்பி விட்டது. கே.ஆர்.எஸ் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40,018 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 31,102 கன அடியில் இருந்து 40,018 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.12 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 21.18 டிஎம்சி. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1003 கனஅடி திறக்கப்படுகிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 50 அடியாக இருந்த நி்லையில் இன்று 55.12 அடியாக உயர்ந்து உள்ளது.