கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கடந்த 16-ம் தேதி கேரளா மாநிலம், திருச்சூரில் கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
15 நாள் நீதிமன்ற காவலில் இருக்கும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் கேட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதிமுக வழக்கறிஞர் மற்றும் சிபிசிஐடி தரப்பு வழக்கறிஞர் என இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பரத்குமார் எம்.ஆர்.விஜயபாஸ்கரின்
ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் திங்கள் கிழமை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.