Skip to content

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் குத்தாலத்தில் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

மயிலாடுதுறையை அடுத்துள்ள குத்தாலம் பேருந்து நிலையம் முன்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆசைத்தம்பி தலைமையில்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் முன்னிலையில் ஓஎன்ஜிசி எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் வேளாண்மண்டலப் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும், குத்தாலம் மயிலாடுதுறை பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. திட்டமிட்டுள்ள 8 எண்ணெய்க் கிணறுகளில் சட்ட விரோதமான மராமத்து வேலைகளைத் தடை செய்யவேண்டும்,

எரிவாயுக் கிணறுகளின் வாழ்நாள் காலத்தை வரையறுத்து பழைய கிணறுகளை மூட உத்தரவிடவேண்டும். எண்ணெய்-எரிவாயு திட்டங்களால் காவிரிப்படுகை பாதிப்பு பற்றிய பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் ஆய்வறிக்கையை தமிழக அரசுவெளியிடவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

பேராசிரியர் ஜெயராமன் பேசும்போது,… மயிலாடுதுறை-குத்தாலம் வட்டங்களில், பழைய எண்ணெய்க் கிணறுகளில் மராமத்து என்ற பெயரில் புதிய பக்கவாட்டுக் கிணறுகளை ஓஎன்ஜிசி உருவாக்க இருக்கிறது. ஓர் எண்ணெய் கிணறு பராமரிப்பிற்கு 7 நாட்கள் போதும்; புதிய கிணறு அமைக்க 45 நாட்கள் தேவை. ஓ.என்.ஜி.சி. ஒவ்வொரு பழைய கிணறிலும் 45 நாட்கள் வேலை செய்கிறது, தமிழ்நாடு அரசு இயற்றிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் -2020 எதற்காக இயற்றப்பட்டதோ அந்த நோக்கத்தையே கொன்று புதைக்கும் வேலையில் இன்று ஓஎன்ஜிசி ஈடுபட்டிருக்கிறது. அதற்கு அரசு அதிகாரிகள் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.

என்.ஜி.சி. சைட் டிராக்கிங் என்ற பெயரில் பழைய கிணறுகளுக்குள் 1500 மீட்டர் ஆழத்தில் பக்கவாட்டுக் கிணறுகள்

அமைத்து 3 கிலோமீட்டர் ஆழம் வரை குடைந்து சென்று எண்ணெய்-எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.

என்.ஜி.சி. நிறுவனம் மராமத்து என்ற பெயரில் பழைய எண்ணெய்க கிணறு வளாகத்திற்குள் பல நூறு குழாய்கள் கொண்டுவருவதன் இரகசியம் என்ன? சிமெண்ட் மற்றும் இரும்புக்குழாய்கள் செலுத்தி கேசிங் செய்யப்பட்ட பழைய எண்ணெய்க் கிணற்றுக்குள் மேலும் குழாய்களை செலுத்த முடியாது. அவ்வாறெனில், பழைய எண்ணெய்க் கிணறு வளாகத்துக்குள் கொண்டுவரப்படும் பல நூறு இரும்புக் குழாய்கள் எதற்காக சாதாரண பராமரிப்புக்கும், கிணறுகளை சுத்தம் செய்யவும், வால்வு மாற்றவும். ரிக் கோபுரங்கள்தேவையில்லை. ஆனால் மராமத்து என்ற பெயரில் ரிக் கோபுரத்தை தூக்கி நிறுத்தி, பல நாட்கள் தொடர்ந்து குழாய்களை உள்ளே செலுத்துவதன் நோக்கம் தெளிவாக புரிகிறது. ஷேல் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கட்சி பாராபட்சமின்றி அதிமுக திமுக அரசுகள் அனைவரும் எதிர்த்துள்ளனர். ஓஎன்ஜிசியின் இந்த திட்டத்தை உணர்ந்து இதற்கு மேல் எண்ணை எரிவாயு தொடர்பான எவ்வித செயல்பாடு களும் காவிரிப்பகுதியில் நடக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!