Skip to content
Home » நீட் தேர்வு தொடர்பான வழக்கை வரும் 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீட் தேர்வு தொடர்பான வழக்கை வரும் 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு  மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு மக்களவை தேர்தல் ரிசல்ட் வெளியான  ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த தேர்வில், இதுவரை இல்லாத அளவுக்கு, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இந்தநிலையில், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியதில் சர்ச்சை உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து, மறு தேர்வு நடத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், நீட் தேர்வு முறைகேட்டின் தீவிரத்தின் அடிப்படையிலேயே மறுதேர்வை நடத்துவதா, இல்லையா என்று முடிவு செய்யப்படும் என முந்தைய விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. இதுதொடர்பாக மத்திய அரசு  தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், ‘நீட் தேர்வு முடிவுகளின் தரவுகளை வைத்து சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில், அசாதாரண சூழல் ஏதும் இல்லை என்பது தெரியவருகிறது.

நிகழாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது’ என்று தெரிவித்தது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு  மீண்டும் கடந்த 11ம் தேதி  விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதில்களை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், சில மனுதாரர்களுக்கு அதன் நகல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. அரசின் விளக்கத்துக்கு அவர்களின் பதிலையும் எதிர்பார்ப்பதால்  18ம் தேதிக்கு(இன்று) ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி  சந்திரசூட்  அறிவித்தார்.

அதன்படி இன்று  வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி  சந்திரசூட் ஒட்டுமொத்த தேர்வு   முறையும்  பாதிக்கப்பட்டுள்ளது என்று உறுதியாக தெரிந்தால் தான் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்  என்றார்.

அதற்கு மனு தாரர்கள்  நீட் தேர்வில் 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளனர். அவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்துங்கள். எல்லோருக்கும் மறு தேர்வு நடத்துங்கள் என்று கேட்கவில்லை என்று வாதிட்டனர். ஆனால் இதை  தலைமை நீதிபதி ஏற்கவில்லை. மறு தேர்வு நடத்த உத்தரவிடமுடியாது என கூறிவிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *