Skip to content
Home » ’இன்ஸ்டா’வில் விவாகரத்து… அதிர்ச்சியை கொடுத்த துபாய் இளவரசி..

’இன்ஸ்டா’வில் விவாகரத்து… அதிர்ச்சியை கொடுத்த துபாய் இளவரசி..

  • by Senthil

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயின் ஆட்சியாளராக ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உள்ளார். இவரது மகள் ஷைக்கா மஹ்ரா(21). பிரிட்டனில் படித்து பட்டம் பெற்றவர்.  இவருக்கும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஷேக் மனா பின் முகமது என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இந்நிலையில், துபாய் இளவரசி மஹ்ரா, தன் கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராமில் அதிரடியாக அறிவித்துள்ளார். அந்த பதிவில், ‘அன்பிற்குரிய கணவரே, நீங்கள் பிறருடன் நேரம் செலவிட்டு வருவதால், நான் விவாகரத்தை அறிவிக்கிறேன். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி’ என, குறிப்பிட்டுள்ளார்.
இளவரசி மஹ்ரா பொதுவெளியில் விவாகரத்தை அறிவித்தது துபாய் பொதுமக்களிடம் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும், இன்ஸ்டாகிராமில் சேர்ந்தார் போல் பதிவிட்டிருந்த புகைப்படங்களை கணவன் மற்றும் மனைவி இருவரும் நீக்கியுள்ளனர். ஒருவரை ஒருவர் பிளாக் செய்துஉள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!