திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் தலைமை நீர்ப்பணி மரக்கடை நிலையத்திலிருந்து மற்றும் விறகுப்பேட்டை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு செல்லும் 450 mm dia pipeல் (ஜோசப் காலேஜ் வீ.என் நகர் அருகில்) உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சரிசெய்ய வேண்டியுள்ளது. எனவே மரக்கடை வார்டு எண். 17, 18, 19, 20, 21, 30, 31 ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் விறகுப்பேட்டை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து செல்லும் பகுதிகளுக்கும் நாளை 18.07.2024 அன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. நாளை மறுநாள் 19.07.2024 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.