கரூர் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை தனக்கு வேண்டியவருக்கு பத்திரம் செய்ய ஒரிஜினல் பத்திரம் காணாமல் போய்விட்டதாகவும் புகார் கொடுத்து பின்னர் வில்லிவாக்கம் போலீசில் Non Trasable Certificate வாங்கியிருந்தார். அந்த சர்டிபிகேட் மூலம் வேறு ஒருவரின் பெயரில் பத்திரம் போட முயற்சி மேற்கொண்டார். இது தொடர்பாக சப் ரெஜிஸ்தார் அப்துல் காதர் மற்றும் சம்மந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் அளித்த புகார்களின் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான விஜயபாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டராக இருந்து தற்போது தாம்பரம் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்ட பிருத்திவிராஜை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ் கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. எம் ஆர் விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அவர் கரூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தார் அப்போது எம் ஆர் விஜய பாஸ்கருக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இதை எடுத்து தான் வில்லிவாக்கம் காவல் நிலையத்தை தேர்வு செய்து அங்கு Non trasable certificate பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கைது செய்யப்பட்ட பிருத்திவிராஜை சிபிசிஐடி போலீசார் கரூர் தின்னப்பா நகர் பகுதியில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சுமார் 6 மணி நேர விசாரணை நடத்தி வருகின்றனர்.