Skip to content
Home » கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர் செய்த ஏட்டு … பாராட்டு குவிகிறது

கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர் செய்த ஏட்டு … பாராட்டு குவிகிறது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி போக்குவரத்து நிறைந்த பகுதி. இங்கு புதிய பஸ் நிலையம்- பழைய பஸ் நிலையத்தை இணைக்கும் சாலையில்  உள்ள ரவுண்டானாவில் போலீஸ் பீட் உள்ளது.  இங்கு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில்   ஏட்டு சாதிக் அலி  ஈடுபட்டிருந்தார். அப்போது  மழை பெய்து கொண்டே இருந்தது. ஆனாலும் மக்கள் வாகனங்களில் அதிக அளவு போக்குவரத்துமாக இருந்தனர்.

மழை பெய்து கொண்டிருந்த போதிலும்  போக்குவரத்து ஏட்டு சாதிக் அலி தனது பீட்டை விட்டு  ஒதுக்குபுறமான இடத்தை தேடிச்செல்லாமல் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி பணியில் இருந்தார்.  அவரது இந்த  பணியை பார்த்த வாகன ஓட்டிகள் அவரை பாராட்டியபடியே சென்றனர்.  சிலர் அதை சமூகவலைதளங்களிலும்  பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!