கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் துவக்கப் பள்ளியில்,கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த தீவிபத்து நடந்த 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று (16-ம் தேதி) குடந்தையில் அனுசரிக்கப்பட்டது.
தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டமும், பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தினார். இறந்த குழந்தைகளின் புகைப்படங்களின் பிளக்ஸ் வைக்கப்பட்டு பெற்றோர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். இந்த வ தீவிபத்தில் சிக்கி காயங்களுடன் உயிர் தப்பிய குழந்தைகளும் இன்று வந்திருந்து 20 வருடத்துக்கு முன் நடந்த கொடூரத்தை நினைவு கூர்ந்து தங்கள் சக நண்பர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இறந்த குழந்தைகள் ஆன்மா சாந்தியடைய இன்று மாலை கும்பகோணம் மகா மக குளத்தில்மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது.