Skip to content
Home » கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர். என். ரவி நேற்று காலை 11.25 மணிக்குசென்னையில் இருந்து விமானத்தில் மனைவி மற்றும் பேரனுடன்டில்லி புறப்பட்டுச் சென்றார். வழக்கமாக ஆளுநர் சென்னை விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் வழியாக செல்வார். பேரனுடன் வந்ததால், அந்த வாயிலை தவிர்த்து, 2-வது உள்நாட்டு புறப்பாடு முனையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆளுநர் தனது தனிப்பட்ட பயணமாகடில்லி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாஜக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை சந்திக்காத நிலையில், 5 நாள் பயணமாக சென்றுள்ளதால், இருவரையும் சந்தித்து தமிழக  அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டில்லி பயணத்தை முடித்து கொண்டு 19-ம் தேதி அவர் சென்னை திரும்புவார் என தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!