கர்நாடக காங்கிரஸ் அரசில், துணை முதல்வராக இருப்பவர் சிவகுமார். 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை காங்., ஆட்சியில் இவர் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 73.94 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக, 2020ல் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவகுமார் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி, இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பீலா எம். திரிவேதி, எஸ்.சி. சர்மா அடங்கிய அமர்வு விசாரித்தது. ‛‛உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இது குறித்து மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.