Skip to content
Home » மயிலாடுதுறையில்…. காலை உணவுதிட்டம்…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கினார்

மயிலாடுதுறையில்…. காலை உணவுதிட்டம்…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பரசலூர் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்,மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .கே.மீனா , மாவட்ட ஊராட்சி குழு தலைவர் . உமா மகேஷ்வரி சங்கர் ஆகியோர் பார்வையிட்டார்கள்.

பின்னர்  பரசலூர் பள்ளியிலும் காலை உணவு திட்டத்தை அமைச்சர்  மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் , மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செந்தில்குமரன் , மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) சாந்தி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!