திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஒருவர் செருப்பில் 9600 அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதன் அமெரிக்க டாலரின் மதிப்பு 9ஆயிரத்து 600 வௌிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் இந்திய நாணய மதிப்பு 7 லட்சத்து 73 ஆயிரத்து 280 ரூபாய் ஆகும். இதனை சுங்கத்துறை அதிகாரிகள் ஆண் பயணியிடமிருந்து கைப்பற்றினர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.