தமிழ்நாட்டில் காலை உணவை சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியாற்றும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து காமராஜர் பிறந்த நாளான இன்று இரண்டாம் கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியில் புனித பாத்திமா அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யாவும் பங்கேற்றார்.