Skip to content
Home » திருச்சியில் இருதரப்பினர் மோதல்… பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு..

திருச்சியில் இருதரப்பினர் மோதல்… பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சங்கிந்தியை சேர்ந்த ஜீவானந்தம் (33) என்பவர் தனது தாய் பிறந்த ஊரான திருவளர்ச்சோலையில் வரும் பொழுது அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் நாகேந்திரனுக்கு அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் இடையே கடந்த 6ம் தேதி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஜீவானந்தமும் நாகேந்திரனுடன் சென்றுள்ளார் அப்பொழுது நாகேந்திரனை விக்னேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக திருவளர்சாலை கீழ தெருவை சேர்ந்தவர்கள் விக்னேஷ் வீட்டிற்கு கடந்த 7ம் தேதி இரவு சென்று உள்ளனர். அப்பொழுது விக்னேஷ் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் ஜீவானந்தம் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஜீவானந்தம், நெப்போலியன், சங்கர் குரு, கதிரவன்,கமலேஷ் மற்றும் திருவளர்ச்சோலை வடக்கு தெருவை சேர்ந்த நாகேந்திரன் ஆகியோரை விக்னேஷ் தரப்பைச் சேர்ந்தவர்கள் அரிவாள், கத்தி ஆகியவற்றில் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நெப்போலியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்த கதிரவன் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தார் மற்றவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம்காவல்துறை உதவி ஆணையர் நிவேதா லட்சுமி விக்னேஷ் தரப்பைச் சேர்ந்த விக்னேஷ் (35), பிரசாந்த், அஜய் ( 29 ), எசன கோரையை சேர்ந்த அப்பு, சரண்ராஜ் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தது 13 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில்தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கதிரவன் இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்ததை தொடர்ந்து பல எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்படடுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *