Skip to content
Home » விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி… திருமணம் நிறுத்தம்…

விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி… திருமணம் நிறுத்தம்…

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ஆனந்த் நகர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் சர்மா. இவரது மகள் சுஷ்மா. அபிஷேக் சர்மா என்ற நபருக்கும் சுஷ்மாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு  (11ம் தேதி) வியாழக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.

திருமண நிகழ்ச்சிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் திருமண விருந்தில்  பன்னீர், வெஜ் ரைஸ் என சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட்டது. இறைச்சி, மீன் என எந்த வகையான அசைவ உணவும் பறிமாறபடவில்லை. அசைவ உணவு வைக்கப்படாததால் மணமகன் குடும்பத்தினர் மணமகள் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மணமகளின் தந்தையான தினேஷ் சர்மாவை மணமகனின் தந்தை சுரேந்திர சர்மா தனது உறவினர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதனால் , இருவீட்டாருக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, திருமணம் நிறுத்தப்பட்டது.

பின்னர், மணமகனின் குடும்பத்தினர் மீது மணமகளின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரில் மணமகன் குடும்பத்தினர் 5 லட்ச ரூபாய் வரதட்சணையாக பெற்றதாகவும், அவைச உணவு பரிமாறவில்லை என்பதால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விருந்தில் மீன், இறைச்சி அசைவ உணவு இல்லாததால் திருமணம் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *