அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் இருந்து அருங்கால் கல்லக்குடி வழியாக ஏலாக்குறிச்சி வரை தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கீழப்பழுவூரிலிருந்து புறப்பட்ட தனியார் மினி பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கல்லக்குடி தாண்டி வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக மினி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்திலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 14 பெண்கள் உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்கள் அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்