Skip to content

அரசு பஸ்சில் மழை நீர் வடிந்த வீடியோ வைரல்… போக்குவரத்து கழக அதிகாரி சஸ்பெண்ட்

கரூரைச் சேர்ந்த பயணி ஒருவர் தொலைதூரம் செல்லக்கூடிய அரசு பேருந்தில் சென்னையில் இருந்து நேற்று இரவு கரூர் பயணம் செய்துள்ளார். அப்போது பெய்த பலத்த மழையின் காரணமாக பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால், ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பயணிகள் மீது மழை நீர் வடிந்து நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தனது செல்போனில் படம் பிடித்த அந்த பயணி பேருந்து நல்ல நிலையில் இல்லை எனவும், இருக்கைகளுக்குள் தண்ணீர் ஓடுகிறது. TN01AN1805 என்ற பதிவு எண் கொண்ட பேருந்தில்
பராமரிப்பு மோசமான நிலையில், சேவை சரியில்லை என்றும், போக்குவரத்து துறை அமைச்சர் இதற்கு பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோரை டேக் செய்து தனது “எக்ஸ்” வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளம் மூலம் வைக்கப்பட்ட இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த சென்னை அரசு விரைவு போக்குவரத்து கழக பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, பேருந்தை உரிய முறையில் பராமரிப்பு செய்ய உத்தரவிட்டும்,  அதை செயல்படுத்தாத சம்பந்தப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக கோவை கிளை பொது மேலாளர் விஜயன்  மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!