கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு நேற்று புகழ்ச்சோழர் மண்டபத்தில் நடராஜப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பரிவார உற்சவமூர்த்திகளுக்கு பஞ்சாமிர்தம், தேன்,நெய், பால், தயிர் இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, திராட்சை, சாத்துக்குடி, கரும்பு பால், விபூதி, பன்னீர் , அன்னம் ( சாப்பாடு) மற்றும் குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சுவாமி நடராஜப் பெருமாள் அம்பிகை உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக நடராஜ பெருமாள் உள்ளிட்ட உற்சவ மூர்த்தி களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.