தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் 10ம் தேதி நடந்தது. அதுபோல இந்தியாவில் மேலும்6 மாநிலங்களில் 12 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. 13 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட 2 மடங்குக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டு இருக்கிறார்.
இதுபோல மற்ற மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியே அதிக இடங்களில் முன்னணியில் இருக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. 3 இடங்களிலும் காங்கிரஸ் முந்துகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி முந்துகிறது. உத்தரகாண்டில் 2 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 2 இடத்தி்லும் காங்கிரஸ் முந்துகிறது.
மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த 4 தொகுதிகளில் 3 தொகுதி பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளாகும். இங்கு இப்போது 4 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் முந்துகிறது. மத்திய பிரதேசம், பீகார் ஆகிய 2 மாநிலங்களில் உள்ள தலா ஒரு தொகுதி்யில் மட்டும் பாஜக முன்னிலை வகிக்கி்றது.