விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ-வான புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அத் தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்று எண்ணி முடிக்கப்பட்டபோது திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோகமாக முன்னணியில் இருந்தார்.
அன்னியூர் சிவா(திமுக) 8564
அன்புமணி (பாமக) 3,096
அபிநயா(நாதக) 438
தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் திமுக 18, பாமக 12, நாதக 2 வாக்குகள் பெற்றிருந்தனர். முதல் சுற்றிலேயே திமுக வேட்பாளர் 5 ,468 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணியில் இருந்தார். தொடர்ந்து மற்ற சுற்றுகளிலும் இதே நிலை தான் நீடிக்கும் என தெரிகிறது. ெமாத்தம் 1,95, 495 வாக்குகள் எண்ணப்பட வேண்டி உள்ளது.