சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கு தேசம் அபார வெற்றி பெற்று முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ., ரகுராம கிருஷ்ண ராஜூ என்பவர், தன்னை கொலை செய்ய, ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் கிரிமினல் சதி செய்ததாக போலீசில் புகார் அளித்தார். 2021ல் வழக்கு ஒன்றில் தான் கைதான போது, முதல்வர், போலீசார் கொலை செய்ய சதி செய்ததாகவும், சிறையில் வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.
இதனடிப்படையில், ஜெகன்மோகன் ரெட்டி, ஐபிஎஸ் அதிகாரிகள் பிவிசுனில்குமார் , பிஎஸ்ஆர் சிதாராமஞ்சநெயிலு மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் விஜய்பால், குண்டூர் அரசு மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் பிரபாவத் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.