தஞ்சாவூரில் பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் 2026 தேர்தலில் பாஜக தனித்து நிற்க தயாராக உள்ளது. அதைப்போல் காங்கிரஸ் கட்சியும் தனித்து நிற்க தயாராக உள்ளதா என திருச்சி வேலுச்சாமி, செல்வப் பெருந்தகையிடம் கேட்டு கூற தயாரா. திமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்வதுதான் காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தினால் எங்களுடைய போராட்டமும் அனைத்து இடங்களிலும் கொடும்பாவி எரிப்பு, ஆர்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். மேலும் மீனவர்கள் பிரச்சனை ஏற்பட காரணம் கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸ், திமுக தான். பாஜக மோடி ஆட்சி வந்த பிறகு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கைது செய்வதை நிறுத்துவதற்கான முயற்சிகள் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் ஜெய்சதிஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.