புதுக்கோட்டை நகராட்சியின் நவீன பூங்கா ரூ.22.50லட்சத்தில் புதிய பேருந்துநிலையம் அருகே வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. மாலை வேளைகளில் இங்கு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு குழந்தைகள் விளையாடும். இதற்காக வீட்டுவசதி வாரியம் சார்பில் பல விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.
வீட்டுவசதி வாரிய வீடுகs; மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அவை இடிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு அந்த பூங்காவையும் யாரும் பராமரிக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சியிலேயே இந்த பூங்கா பராமரிப்பின்றி கிடந்தது. இப்போது நிலைமை இன்னும் மோசமாகி பூங்காவின் வேலிகள் அனைத்தும் அறுந்து போய்விட்டதால், இப்போது அது கால்நடைகளின் புகலிடமாக மாறிவிட்டது.
நகரின் நடுப்பகுதியில் இப்படி பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதால் அந்த பகுதி மக்கள், குழந்தைகள் பொழுதுபோக்க இடம் இல்லை. எனவே குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட இந்த பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.