கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கடந்த மார்ச் மாதத்தில் பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு அதற்காக ஒரு ஆப் லிங்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பல்வேறு தவணைகளில் அந்த ஆப்-ல் கொடுக்கப்பட்ட லிங்க் வங்கி கணக்குகளில் ரூ. 2 கோடி வரை அனுப்பி உள்ளார்.
ஆனால், அந்த ஆப்-ல் தெரிவித்து இருந்தபடி எவ்வித லாபமும் அவருக்கு கிடைக்கவில்லை. அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் யாரும் பேசவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இதையடுத்து அந்த அரிசி ஆலை உரிமையாளர் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.