அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் மீது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த விஜயபாஸ்கர் கடந்த 1 மாதமாக தலைமறைவாக உள்ளார். அவர் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் கடந்த வாரத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர் .
அதனை தொடர்ந்து இன்று காலை முன்னாள் அமைச்சர் ஆதரவாளரும் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியுமான கரூர் கவின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கவினின் தந்தை குழந்தைவேலுவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். கவினும் ஒருமாதமாக தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி பகுதியில் உள்ள அம்மன் நகரில் கவின் இல்லத்தில் சிபிசிஐடி ஆய்வாளர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.