பெரம்பலூர் அருகே அரணாரையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். அரசு தொடக்கப்பள்ளிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முத்து நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெரம்பலூர் நகராட்சி சார்பில் ரூ.21 லட்சம் மதிப்பிட்டில் காலை உணவு திட்டத்திற்காக சமையல் கூடம் அமைக்கப்பட்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று தொடக்கி வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை 17 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள 69 மாணவர்கள் பயிலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஜனவரி 23 ஆம் தேதியான இன்று காலை 8 மணியளவில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்,
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் 17 வது வார்டு அரணாரை துரைகாமராஜ் தலைமை தாங்கினார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாவதி முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராதா,பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன்,துணைத்தலைவர் ஹரி பாஸ்கர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், வருவாய் துறையினர் மற்றும் பெரம்பலூர் நகரத்தில் உள்ள வார்டு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.