தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு சமூக பொறுப்புணர்வுகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளி மாணவர்களுக்காக மும்பை ப்ளூ சிப் நிறுவனத்தினர் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 2 வகுப்பறை கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தனர். இந்த வகுப்பறை கட்டடங்கள் தற்போது கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வகுப்பறை கட்டடங்களை பள்ளியின் சாரண மாணவர் நாகேஸ்வரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சாரணிய மாணவிகள் குத்துவிளக்கேற்றினர். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி, சென்னை ஐஐடி கணித பேராசிரியர் முரளி கிருஷ்ணன், தெற்கு ரயில்வே பொறியாளர் ரவிக்குமார், சென்னை ஐஐடி கியூப் நிறுவனத்தைச் சேர்ந்த ஜான், முருகதாஸ், ரவிக்குமார், மனோஜிப்பட்டி எட்வின், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் மருதாம்பாள் மற்றும் கிராம மக்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
பள்ளி வகுப்பறை கட்டிடத்தை மாணவரை வைத்தே திறக்க வைத்ததற்காக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பொதுமக்கள் பாராட்டினர்