மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் 1ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி என தொடர் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட வழக்கறிஞர்கள் பேரணியாக வந்தனர்.
ரயில் நிலையம் வந்ததும் வழக்கறிஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது வழக்கறிஞர்கள் முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ரயில்நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர்.