Skip to content
Home » தாம்பரம், திருப்பூர், சேலம் போலீஸ் கமிஷனர்கள் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

தாம்பரம், திருப்பூர், சேலம் போலீஸ் கமிஷனர்கள் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

 தமிழக அரசின் முதன்மைச் செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு…  தாம்பரம்போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி, ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அபின் தினேஷ் மோதக் தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். எச்.எம்.ஜெயராம் மாநில குற்ற ஆவணப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  மகேஷ் குமார் அகர்வால் ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி ஆயுதப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாகவும், சஞ்சய் குமார் கடலோர காவல் படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜீவ் குமார் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். வினீத் தேவ் வான்கடே காவல் துறை தலைமையக நிர்வாகப் பிரிவில் இருந்து காவல்துறை தலைமையக ஏடிஜிபியாகவும் கே.எஸ்.நரேந்திரன் நாயர், சென்னை வடக்கு கூடுதல் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்ணன், சென்னை தெற்கு கூடுதல் காவல் கமிஷனராகவும் ,  சட்டம் – ஒழுங்கு ஐஜி அஸ்ரா கர்க் வடக்கு மண்டல ஐஜியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக பிரவீன் குமார் அபினபும், லட்சுமி திருப்பூர் போலீஸ் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக தமிழ் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி ஐஜியாக இருந்து வரும் அன்புவுக்கு சிபிசிஐடி ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *