மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள , பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கரூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டு 60-க்கும் மேற்பட்டோர் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய சட்டத்தை கருப்பு தினமாக அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும், புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும், இந்தி திணிப்பை தடுக்க வேண்டும், குற்றவியல் சட்ட மாற்றங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.