தமிழ்நாடு கராத்தே சங்கம் (TSKA) சார்பாக 4 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான சப்-ஜூனியர் கராத்தே போட்டி மாநில அளவில் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு வயது மற்றும் எடைப்பிரிவுகளில், கட்டா மற்றும் குமித்தே ஆகிய பிரிவிகளில் நடந்த போட்டியில் 1,000க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.
இதில் கோவையில் இருந்து மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியில் பயிற்சி பெறும் மாணவ,மாணவிகள், மூன்றாவது இடம் பிடித்து மூன்று வெண்கல பதக்கங்கள் பெற்ற தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். குமித்தே தனி பிரிவில்வெற்றி பெற்று கோவை திரும்பிய சர்வேஷ், அஸ்வபிரதா மற்றும் சாய் தக்ஷன் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மை கராத்தே இண்டர்நேஷனல் மையம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மையத்தின் நிறுவனர் தியாகு நாகராஜ் மற்றும் பயிற்சியாளர்கள் சிவமுருகன், அரவிந்த், விது சங்கர், சரவணன், விமல் பிரசாத், பவிலாஷ், பிரசாந்த், தேவதர்ஷினி மற்றும் மாணவர்கள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.