திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் சார்பில்
“சங்க அமைப்பு தினம்” சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இக் கூட்டத்திற்கு வட்டத் தலைவர் பெ.முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டப் பிரதிநிதி செல்லப்பன் வரவேற்றுப் பேசினார். தலைவர் தம் உரையில், திருச்சியில் 20-07-2024. சனிக்கிழமை நடைபெறும் நமது சங்க முதலாம் ஆண்டு “மாநில பொதுக்குழு கூட்டம்” பற்றி விவரித்தார். செயலாளர் செ.திருஞானம், சங்க செயல்பாடுகள்
பற்றி விவரித்தார்.
ஜூலை மாதத்தில் ஓய்வு பெற்றவர்கள் இம்மாதத்தில் கருவூலத்திற்குச் சென்று நேர்காணல் (MUSTERING) செய்து கொள்ளும்படி கூறினார்.
பொருளாளர் சி.செல்வராஜு வரவு ,செலவு, அறிக்கை வாசித்து ஒப்புதல் பெற்றார்.
சங்கப் பொறுப்பாளர்களுக்கு, சங்கத்தின் சார்பாக, கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. அ.அமல்ராஜ். நன்றி கூறினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:
1) தமிழ்நாடு அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை, உடனே அமல்படுத்த வேண்டும்.
2) ஓய்வூதியர்கள் மருத்துவ சிகிச்சை பெறும் பொழுது, முழு தொகையையும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டது