Skip to content
Home » கரூர் பள்ளியில்…… மாணவர்களுக்கு மாதிரி லோக்சபா தேர்தல்….

கரூர் பள்ளியில்…… மாணவர்களுக்கு மாதிரி லோக்சபா தேர்தல்….

கரூரை அடுத்த மணவாடி பகுதியில் உள்ள  தனியார் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தலைமைப் பண்புகளை வளர்க்கும் வகையில், மாதிரி லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு பொறுப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, முதலாம் ஆண்டாக நடந்த தேர்தலில், மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வாக்களித்தனர்.

முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பூத் சிலீப் கொடுத்து பள்ளி வளாகத்தில் வரிசையாக நின்று கைவிரல்களில் மை வைத்து, மாதிரி எலக்ட்ரானிக் ஓட்டிங் மிஷினில் வேட்பாளர்கள் நிற்கும் பல்வேறு சின்னங்களில் தாங்கள் விரும்பியவர்களுக்கு தங்களது வாக்கினை செலுத்தினர்.

இதில் அதிக ஓட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வகுப்பு தலைவர்கள் ஓட்டளித்து லோக்சபா உறுப்பினர்களை தேர்வு செய்தனர். சபாநாயகர், பிரதமர் உள்பட பல்வேறு துறை அமைச்சர்களாக 13 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில்  பதவி  ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், கிளாஸ் கவர்னர், ஸ்கூல் பீபுல் லீடர், அசிஸ்டன்ட் லீடர்களை தேர்வு செய்தோம். பூத் சிலீப் வழங்கினர். அதை ஏஜென்டிடம் கொடுத்து அதன் பிறகு வாக்களித்தோம். இந்த முறை பாராளுமன்றத்தில் எப்படி தேர்தல் நடந்ததோ அதேபோன்று இதனை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மாதிரி எலக்ட்ரானிக்கல் வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு வாக்குப்பதிவினை செய்தோம்.

இது எங்களுக்கு புதிய அனுபவத்தை அளித்தது. கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது எங்கள் வீட்டில் வந்து ஓட்டு கேட்டனர். எங்களுக்கு வாக்களியுங்கள் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து தரப்படும் என கூறி வாக்குகள் கேட்டனர். அதேபோன்று எங்கள் பள்ளியில் மாணவ வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். எங்கள் பெற்றோரிடம் தேர்தல் குறித்த எந்த சந்தேகத்தையும் கேட்க மாட்டோம். ஏனென்றால், தேர்தலை எவ்வாறு கையாள வேண்டும் என்று தெரிந்து கொண்டோம். கரூரில் இது போன்று எந்த பள்ளியிலும் நடைபெறவில்லை என்று தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!